WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 29, 2018

மார்ச் 17ல் தீக்குளிப்பு; ஆசிரியர்கள் அதிரடி!

தமிழக அரசின், எட்டாவது ஊதியக்குழுவில், முதுநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, மார்ச், 17ம் தேதி, தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும்’ என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தீர்மானங்கள் விபரம்:தமிழக அரசின், எட்டாவது ஊதியக்குழுவின், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின், எட்டாவது ஊதியக் குழுவிலும், முதுகலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, மாநில தலைவர் மணிவாசகன் தலைமையில், மார்ச், 17ம் தேதி, 1,000 ஆசிரியர்கள் சென்னையில் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவர்.


மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் புறக்கணிக்கப்படும். மேல்நிலை கல்விக்கென தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.