WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 30, 2018

தேர்வு முறைகேடு : அரசு அறிக்கை.

'பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நான்கு நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கலாகும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர்களை நியமிக்க, 2017 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய, இந்தத் தேர்வின் முடிவுகள், நவம்பரில் வெளியிடப்பட்டன. அப்போது, தேர்வு முடிவில், 200 பேர் தில்லுமுல்லு செய்து, அதிக மதிப்பெண் பெற்றதாக புகார் எழுந்தது. உடன், டி.ஆர்.பி., அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானது. இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கு பதிந்து, ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்த பிரச்னையால், பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே நடந்த சிறப்பு ஆசிரியர் பதவிக்கான தேர்வு முடிவுகளும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கல்லுாரி பேராசிரியர் பணி, வேளாண் பயிற்றுனர் பணி, மாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான, தேர்வு அறிவிப்புகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் நேற்று கூறுகையில், ''பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நான்கு நாட்களில், விசாரணை அறிக்கை தாக்கலாகும். அதை தொடர்ந்து, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் துவங்கும்; புதிய தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.