WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 30, 2018

உயர்கல்வியில் உதவி பேராசிரியர் பணி சம்பந்தமான சௌகான் அறிக்கையை எதிர்க்கும் நெட் செட் விரிவுரையாளர் அமைப்பு

சௌகான் அறிக்கையின் படி பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராக செல்ல கட்டாயம் பிஎச்டி தகுதியுடையவர்களாக இருந்தால் மட்டுமே பணிக்கு செல்ல இயலுமாம். அதாவது பிஎச்டி இல்லாமல் நெட் செட் தகுதியுள்ளவர்களுக்கு பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் பணி தரக் கூடாது என சௌகான் அறிக்கை  கூறுகிறது. அது மட்டுமல்லாமல்,  பிஎச்டி இல்லாமல் நெட் செட் தகுதி உடையவர்கள் கல்லூரிகளுக்கு மட்டுமே செல்ல இயலும் . ஆனால் செட்நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற இயலாதவர்கள்  கல்லூரிக்கும் செல்ல விண்ணபிக்க இயலும் அதே சமயம் பல்கலைகழகத்திற்கும் விண்ணபிக்க இயலும் என கூறி இருப்பது மிகவும் தவறானது. இதனை தமிழ்நாடு நெட் செட் தகுதியுடைய விரிவுரையாளர்கள் கண்டிக்கிறது. சௌகான் அறிக்கையை ஒரு வேலை யுஜிசி அமல்படுத்தினால் உலக கல்விதரத்தில் மோசமான நாட்டில் இரண்டாவது இடத்தில் தற்போது உள்ள இந்தியா மிக வேகமாக முதல் இடத்தினை பிடிக்கும். ஏற்கனவே பெரும்பாலன பிஎச்டி பட்டங்கள் ,( 50% அதிகமானவர்களின் ஆராய்ச்சி அறிக்கைகள் ) போலியானவை எனவும் காப்பி அடிக்கப் பட்டவை எனவும் தெரிய வந்துள்ளது. ஒரு சில ஆராய்ச்சி வழிகாட்டிகளை தவிர்த்து பெரும்பாலனவர்கள் ஆராய்ச்சி உபகரணங்கள், கெமிக்கல் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகள் வாங்குவதில் கம்பெனி மூலம் கிடைக்கும் 30% வரை 40%  கமிஷன் நம்பியே உள்ளனர். இதனால் தான் ஒரு சில கல்வி நிலையங்கள் மற்றும் ஒரு சில ஆராய்ச்சி வழிகாட்டிகளை தவிர்த்து பெரும்பாலனவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில்  நடத்தும் முறைகேடுகள் படிக்க தெரியாத பாமரன் காது வரை கேட்க தொடங்கி உள்ளன. இந்தியாவில் குறிப்பாக தமிகத்தில் அண்ணாமலை பல்கலை கழக பணி நியமன ஊழல்  பணி நிரவல் ஊழல் , செட் தேர்வில் ஊழல் , பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்தில் ஊழல், முக்கியமான பல்கலை கழக அதிகாரிகளின் தற்கொலைகள் , பல்கலை கழக துணை வேந்தர்களின் நியமன ஊழல் , என பள்ளி கூட பியுன் வேலையில் தொடங்கி பல்கலை கழக பேராசிரியர் நியமனம் வரை ஊழல் தான். எனவே சௌகான் அறிக்கை போன்றவை எல்லாம் ஊழலையும் ஒழிக்காது, இந்திய கல்வி தரத்தையும் உயர்த்தாது. எனவே சௌகான் அறிக்கையினை என தமிழ்நாடு நெட் செட் தகுதியுடைய விரிவுரையாளர்கள் அமைப்பு கண்டிப்பதாக தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.