WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 29, 2018

தங்க பதக்கம் தர மறுப்பதா? பல்கலைக்கு ஐகோர்ட் கண்டிப்பு

முதல் முறை தேர்வில் பங்கேற்காததை காரணம் காட்டி, மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்க இயலாது என, பல்கலைகள் இனி கூற முடியாது. டில்லி, குருகோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலையில், 2010ல், பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்பு படித்த ஒரு மாணவர், சின்னம்மை பாதிப்பால், இரு தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை. அடுத்தாண்டு, அந்த தேர்வுகளை எழுதிய அந்த மாணவர், மொத்தத்தில் அதிக மதிப்பெண் பெற்று, பல்கலையில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். ஆனால், முதல் முறை தேர்வில் பங்கேற்காமல், இரண்டாவது முயற்சியில் அதிக மதிப்பெண் பெற்றதால், அவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்காது என, பல்கலை நிர்வாகம் கூறியது.அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’முதல் முறை தேர்வில் பங்கேற்காததை காரணம் காட்டி, மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்க இயலாது என பல்கலைகள் கூறக்கூடாது’ என, உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.