WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 29, 2018

போலியை நீக்க உத்தரவு!

பள்ளிகளில், மாற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விபரங்களை, ’எமிஸ்’ இணையதளத்தில் இருந்து நீக்கும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சரியான விபரங்களை சேகரிக்க, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகங்கள் உத்தரவிட்டுள்ளன. 


இதன்படி, மாணவர்களின் பெயர், ஆதார் எண், பெற்றோர் பெயர், மாணவர்களின் மொபைல் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்களை, கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பான, ’எமிஸ்’ இணையதள தொகுப்பில் சேகரிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


இதையடுத்து, அனைத்து மாணவர்களின் விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் சேகரித்து வருகின்றனர். இந்த தகவல் தொகுப்பில், பல பள்ளிகளில், மாற்று சான்றிதழ் வாங்கி சென்ற மாணவர்களின் விபரங்கள், போலியாக இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.


எனவே, அனைத்து பள்ளிகளும், எமிஸ் விபரங்களை சரிபார்த்து, பள்ளிகளில் இருந்து வேறு இடங்களுக்கு சென்ற, மாணவர் விபரங்களை உடனே நீக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.