'மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை, தமிழில் எழுத அனுமதி வழங்க வேண்டும்' என, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர், ஜிதேந்திர சிங்கிற்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடித விபரம்: மத்திய அரசு பணியிடங்களுக்கான, போட்டி தேர்வு வினாத்தாள்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன. வட மாநில போட்டியாளர்கள், இத்தேர்வுகளை, அவர்களுடைய தாய் மொழியான, ஹிந்தியில் எழுதும் உரிமை உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தமிழில் தேர்வு எழுதும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
வட மாநிலத்தவர்கள், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு, பணியிட மாறுதல் பெற்று சென்று விடுவதால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், காலிப் பணியிடங்கள் அதிகரித்து விட்டன. தேசிய அளவிலான தேர்வுகளை, தாய்மொழியான தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.