கௌரவ விரிவுரையாளர்களின் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
அரசு கலைக் கல்லூரிகளில் ஏறத்தாழ 1800 பேர் வரை கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மிக குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியம் கூட கடந்த ஏப்ரல் மாதம் முதல் 6 மாத காலமாக வழங்கப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
ஊதியம் வழங்க வேண்டியதிலும், பணியாளர் உரிமைகளை மதித்து செயல்படுத்துவதிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசும், அரசுத் தொடர்புடைய அமைப்புகளும், இப்படி நியாயமற்ற நடைமுறைககளில் ஈடுபடுவது சட்ட அத்துமீறல் செயலாகும். இதனை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கௌரவ விரிவுரையாளர்களின் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.