சார் - பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பணிகளுக்கான, &'குரூப் - 2&' தேர்வில், பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்களையும் அனுமதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மனுவுக்கு பதில் அளிக்க, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குரூப் - 2 தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, ஆகஸ்ட், 10ல், அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த, இளையபெருமாள் தாக்கல் செய்துள்ள மனு:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
&'குரூப் - 1&' பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வுகளுக்கு, பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.ஆனால், குரூப் - 2 தேர்வுக்கு, பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இதனால், பட்டப் படிப்பில் இறுதி ஆண்டில் உள்ளவர்கள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இறுதி ஆண்டில் உள்ளவர்களையும், தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, வரும், 23ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.