WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 16, 2018

அரசு ஊழியர்களுக்கான சேமநல நிதி வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக உயர்வு.

   அரசு ஊழியர்களுக்கான சேமநல நிதி வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக உயர்வு
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கு அரசு ஊழியர்களுக்கான பொது சேமநல நிதி மற்றும் தொடர்புடைய திட்டங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.


கடந்த மாதம் மத்திய அரசு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் 0.4 சதவீதம் உயர்த்தப்படும் என அறிவித்தது. வங்கிகளில் பணம் வைப்புக்கான வட்டி விகிதம் உயர்ந்த நிலையில் அதற்கேற்ப இந்த உயர்வு அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், 2018-2019ம் ஆண்டின் அக்டோபர் 1ந்தேதி முதல் டிசம்பர் 31ந்தேதி வரையிலான பொது சேமநல நிதி (வருங்கால வைப்பு நிதி) மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற நிதிகளுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக இருக்கும் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.


இந்த வட்டி விகிதம், மத்திய அரசு ஊழியர்கள், ரெயில்வே துறை மற்றும் பாதுகாப்பு படையினரின் வருங்கால வைப்பு நிதிகளுக்கு அமலாகும்.


கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பொது சேமநல நிதிக்கான வட்டி விகிதம் 7.6 ஆக இருந்தது. இந்நிலையில், அதில் 0.4 சதவீதம் உயர்த்தப்பட்டு அடுத்த காலாண்டிற்கு 8 சதவீதம் ஆக வட்டி விகிதம் இருக்கும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.