WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 31, 2018

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு மதிப்பெண் சாத்தியமா?

அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கி பணி நிரந்தரம் செய்யப்படும் என உயர்கல்வித்துறை வட்டாரங்கள் அறிவித்துள்ளது. உண்மையில் அவ்வாறு சிறப்பு மதிப்பெண்கள் தர
வாய்ப்புக்குறைவு , அதைவிட அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 40% அல்லது 50% உள் இட ஒதுக்கீடு தரலாம். அது ஓரளவு ஏற்படையதாக இருக்கும். இல்லையெனில் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 13 இலட்சம் ( சனவரி 2010 ஆம் ஆண்டு முதல் 25000 தராமல் 6000 ,10000& 15000 தந்து வருவதால்) தந்து விட்டு பிறகு open trb நடத்தப் படலாம் . இதையெல்லாம் தவிர்த்து அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்யக் கூடாது என மாண்புமிகு நீதியரசர் மார்கண்டேய கட்ஷூ தீர்ப்பு உள்ளது. அதனையும் மீறி யுஜிசி கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி சம்பளம் தராமல் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையை சாதகமாக்கிக் கொண்டு குறைந்த சம்பளத்தில் கௌரவ விரிவுரையாளர்களை கொள்கை முடிவு என்ற பெயரில் பணியமர்த்தி உள்ளது ( 1.1.10 முதல் 25000 தரப்பட வேண்டும். 2017 பிறகு 40000 தரப் பட வேண்டும் ) தற்போதைய விதிப்படி உள்ள யுஜிசி சம்பளமும் தரவில்லை. இதையெல்லாம் சட்டப்படி தராதவர்கள் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கி கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்தினால் நிச்சயம் மகிழ்ச்சியான செய்தி தான் . அதுமட்டுமல்லாமல் கௌரவ விரிவுரையாளர் சங்க பிரதிநிதிகள் பெரும்பாலனோர் தனது கௌரவ விரிவுரையாளர்கள் சமுகத்தின் உரிமைகளை பெற்று தராமல் மேலதிகாரிகளின் துணையுடன் திரைமறைவு புரோக்கராக வலம் வருகின்றனர். சிலர் நன்கொடை வசூல் செய்யவும் , சந்தா வாங்கவும் அப்பாவி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். குறிப்பாக செட் நெட் முடிக்காத கௌரவ விரிவுரையாளர்களிடமும் தனியார் கல்லூரி உதவி பேராசிரியர்களிடமும் 3 இலட்சம் 4 இலட்சம் வாங்கி கொண்டு ஒரு சில புரோக்கர்கள் அன்னை தெரசா பல்கலை கழகம் நடத்திய 2 வது 3 வது செட் தேர்வில் சுமார் 1500 பேரை தேர்ச்சிப் பெற வைத்துள்ளனர். அந்த புரோக்கர்களில் சிலர் நிரந்தர பேராசிரியர்களின் பணிமாறுதலிலும் அண்ணாமலை பல்கலை கழக உபரி ஆசிரியர்களின் பணிநிரவலிலும் மூக்கை நுழைத்துள்ளதாக தகவல் கசிந்து உள்ளது. பேரத்தொகைகளை எந்த பயமுமின்றி தயக்கமுமின்றி சாதரணமாக பொது சந்திப்பு கூட்டங்களில் முகம் சுளிக்கும் வகையில் பேசுகின்றனர். இவர்களால் தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே தமிழக உயர்கல்வித் துறை முக்கிய அதிகாரிகளும், தமிழக ஊழல் தடுப்பு பிரிவும் , சிபிஐ யும் அன்னை தெரசா செட் தேர்வு 100 கோடி ஊழல் , அண்ணாமலை பல்கலை கழக உபரி ஆசிரியர்களின் பணிநிரவல் ஊழல் போன்ற ஊழல்களை விசாரிக்க வேண்டும் என தமிழக கல்வியாளர்களும் , இளைய தலைமுறை கல்லூரி மாணவர்களும் , திட்டமிட்டு பணி நீக்கம் செய்யப்பட்டதால் பணிவாய்ப்பினை இழந்த கௌரவ விரிவுரையாளர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.