அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகளில், குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று, தலைமைஆசிரியர்களே தேசியக்கொடி ஏற்ற வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது
ஆனால், பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டதில் இருந்து, தேசியக்கொடியை ஏற்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் போட்டி போடுகின்றனர். இது சம்பந்தமாக பல இடங்களில் பிரச்னையும் எழுந்தது.
இந்நிலையில், 'தேசியக் கொடியை காட்சிப்படுத்துவதற்கான சட்டங்கள் மற்றும் மரபுகளின் படி, பள்ளிகள், கல்லுாரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை தலைமையாசிரியர் அல்லது முதல்வர் ஏற்ற வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் தேசிய கீதம் பாடி, மரியாதை செலுத்த வேண்டும்' என அரசு உத்தர விட்டுள்ளது.
இது தொடர்பான வழிகாட்டுதல்களை தவறாது கடைப்பிடிக்கும்படி, அனைத்து அரசு, நகராட்சி, நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.