WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 4, 2018

FLASH NEWS:----->தமிழகத்தில் பரவலாக மழை.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.

      rain-across-tamilnadu-school-leave-to-3-districts


தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. சில மாவட்டங்களில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, மாங்குடி, கங்களாஞ்சேரி, கூத்தாநல்லூர், வடகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் இருந்தே மழை பெய்து வருகிறது. இதேபோல தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தருமபுரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.


தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதேபோல புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.