'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை, ஆன்லைனில் பதிவு செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., சிறப்பு கல்வி படிப்பு நடத்தப்படுகிறது. இதில், 2019க்கான பி.எட்., சிறப்பு கல்விக்கு சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கு, 'இந்திய மறுவாழ்வு கழக விதிகள் - 2015' மற்றும், தமிழக உயர்கல்வி விதிகளின்படி, கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்து, அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.எட்., சிறப்பு கல்வி பட்டப்படிப்பு, பி.எட்., பொது பட்ட படிப்புக்கு இணையானது என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யும், தமிழக அரசும் அறிவித்துள்ளன.மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், www.tnou.ac.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விபரங்களை, 044 - 2430 6600 என்ற, தொலைபேசியில் தெரிந்து கொள்ளலாம் என, பல்கலை பொறுப்பு பதிவாளர், தியாகராஜன் அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.