WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 29, 2019

580 பணியிடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு.

580 பணியிடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு

ஒரே நாளில், 580 பணியிடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமனம் வழங்கி, டி.என்.பி.எஸ்.சி., சாதனை புரிந்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக வேளாண் துறையில், உதவி வேளாண் அதிகாரி பதவியில், 580 காலியிடங்களுக்கு, இந்த ஆண்டு, ஏப்., 7ல், தேர்வு நடத்தப்பட்டது; 4,158 பேர் பங்கேற்றனர். அவர்களில், 797 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, இரண்டு நாட்கள், ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, அவகாசம் தரப்பட்டது.பின், 797 பேருக்கும், சென்னை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. சான்றிதழ்களின் அசல் சரிபார்க்கப்பட்டு, நேற்று ஒரே நாளில், தகுதி பெற்ற, 580 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இது, தேர்வாணைய வரலாற்றில் முதன்முறை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.