WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 29, 2019

அரசு பள்ளியில் ஆசிரியர்கள், 'குஸ்தி' உதவி தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட் .

உளுந்துார்பேட்டை அருகே, தலைமை ஆசிரியரை தாக்கிய, உதவி தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த, அருங்குறிக்கை அரசு உயர் நிலைப் பள்ளியில், 209 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, தலைமை ஆசிரியர் உட்பட, எட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
இப்பள்ளியின், தலைமை ஆசிரியர், கோபுவிற்கும், உதவி தலைமை ஆசிரியர், சங்கருக்கம், பணி தொடர்பாக, 'ஈகோ' பிரச்னை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், ஆசிரியர்களுக்கான கூட்டம், பள்ளி வளாகத்தில் நடந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த சங்கர், மரத்தால் ஆன, கரும்பலகை துடைப்பானால், தலைமையாசிரியர் கோபுவை தாக்கினார். இதில் அவர், படுகாயம் அடைந்தார்.இதுகுறித்து, கோபு கொடுத்த புகாரின்படி, திருவெண்ணெய்நல்லுார் போலீசார், சங்கர் மீது, வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, இந்த பிரச்னை குறித்து விசாரணை நடத்திய, விழுப்பும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், முனுசாமி, உதவி தலைமையாசிரியர், சங்கரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.