தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குனர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அரசு தேர்வுகள் இயக்கக இயக்குனராக பணிபுரிந்த வசுந்தராதேவி, மார்ச், 31ல் ஓய்வு பெற்றார். அவருக்கு மூன்று மாதம் பணி
நீட்டிப்பு வழங்கப்பட்டது. பணி நீட்டிப்பு, இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உஷாராணி, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் செயலர் பழனிசாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனர் லதா, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர், சேதுராமவர்மாவுக்கு, இயக்குனராக, தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டு, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, பள்ளி கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.