பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடத்தப்படும், 'டிப்ளமா'இன்ஜினியரிங் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்க, தமிழக உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.அதைத்தொடர்ந்து, பாலிடெக்னிக்குகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிப்பிற்கான பாடத்திட்டத்தை மாற்றவும், உயர் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 முடித்தவர்கள், நேரடி இரண்டாம் ஆண்டிலும், டிப்ளமா இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.தற்போது, பள்ளி கல்வியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு பாடத்திட்டம் மாறியுள்ளதால், முதற்கட்டமாக, பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. இது, 2020 - 21ம் கல்வி ஆண்டில், அமலுக்கு வரும்.இரண்டாம் ஆண்டு, டிப்ளமா மாணவர்களுக்கு, 2021 - 22ம் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்.'நடப்பு கல்வி ஆண்டில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாடத்திட்டமே தொடரும்' என, அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கும், தொழில்நுட்ப கல்வி இயக்குன ரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.