தமிழகத்தில், பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 58 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன.அவற்றில், 37 ஆயிரம் பள்ளிகள், அரசின் பல்வேறு துறை சார்ந்த பள்ளிகள்; 13 ஆயிரம் பள்ளிகள், தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள்.மீதமுள்ள, 8,000 பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள்.
இப்படி அரசு உதவி பெறும் பள்ளிகள், தங்கள் பள்ளியின் பெயரை மட்டுமே, பெயர் பலகையில் குறிப்பிடுகின்றன.அதனால், மாணவர்களின் பெற்றோருக்கு, அவை தனியார் சுயநிதி பள்ளிகளோ என்ற எண்ணம் உருவாகிறது. அந்த பள்ளிகளும், அரசு உதவி பெறுவதை, பெற்றோருக்கு தெரிவிப்பதில்லை.மாறாக, மக்களின் எண்ணத்தை பயன்படுத்தி, சுயநிதி பள்ளிகளை போன்று, அதிக அளவு கல்வி கட்டணம் வசூலிக்கின்றன. இதுகுறித்து, அரசுக்கு பல்வேறு புகார்கள்வந்துள்ளன.சட்டசபை மதிப்பீட்டு குழு சார்பிலும், பள்ளி கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகள், தங்களின் பெயர் பலகையில், அரசு உதவி பெறும் பள்ளி என, பெரிய எழுத்தில் எழுத வேண்டும்.அவற்றை, முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.