WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 1, 2019

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு 3-ந் தேதி தொடங்குகிறது கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் அட்டவணை வெளியீடு .

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு 3-ந் தேதி தொடங்குகிறது கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் அட்டவணை வெளியீடு

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஏற்கனவே சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.



அதன் தொடர்ச்சியாக, பொது கலந்தாய்வு வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. பொது கலந்தாய்வு கடந்த ஆண்டு முதல் ஆன்-லைனிலேயே நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலந்தாய்வு ஆன்-லைனில் புதன்கிழமை தொடங்கி, 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. 29-ந் தேதி துணை கலந்தாய்வு நடக்கிறது.

இந்த நிலையில் பொது கலந்தாய்வில் ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகள் எந்தெந்த நாட்களில் தங்கள் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும் என்ற கால அட்டவணையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டு இருக்கிறது.

கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணை விவரம் வருமாறு:-

* 200-178 கட்-ஆப் மதிப்பெண் வரை உள்ளவர்கள் (1 முதல் 9 ஆயிரத்து 872 வரையிலான தரவரிசையில் உள்ளவர்கள்) 3-ந் தேதி முதல் 10-ந்தேதிக்குள் முன்வைப்பு தொகையும், 8-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை விருப்பப்பாட பிரிவு, கல்லூரிகளையும் தேர்வு செய்ய வேண்டும். இதில் எத்தனை கல்லூரிகள் வேண்டுமானாலும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். 3-வது நிலையாக 11-ந் தேதிக்குள் தேர்வு செய்த பட்டியலில் கல்லூரிகளின் வரிசையை மாற்றி அமைத்து உறுதி செய்ய வேண்டும். 4-வது நிலையாக 11 மற்றும் 12-ந்தேதிகளில் ஒதுக்கீட்டை ஏற்க வேண்டும். 13-ந்தேதி இறுதி ஒதுக்கீடு அளிக்கப்படும்.

* 177.75-150 கட்-ஆப் மதிப்பெண் வரை உள்ளவர்கள் (9 ஆயிரத்து 873 முதல் 30 ஆயிரத்து 926 வரையிலான தரவரிசையில் இருப்பவர்கள்) 8-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை முன்வைப்பு தொகையும், 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விருப்பப்பாட பிரிவு, கல்லூரிகளையும் தேர்வு செய்ய வேண்டும். 16-ந்தேதி கல்லூரிகளின் வரிசையை மாற்றி அமைக்க வேண்டும். பின்னர், 16, 17-ந்தேதிகளில் ஒதுக்கீட்டை ஏற்று, 18-ந்தேதி இறுதி ஒதுக்கீட்டை பெறலாம்.

கட்-ஆப் மதிப்பெண்...

* 149.75-115 கட்-ஆப் மதிப்பெண் வரை உள்ளவர்கள் (30 ஆயிரத்து 927 முதல் 64 ஆயிரத்து 93 வரையிலான தரவரிசையில் இருப்பவர்கள்) 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை முன்வைப்பு தொகையும், 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை விருப்பப்பாட பிரிவு, கல்லூரிகளையும் தேர்வு செய்ய வேண்டும். 21-ந்தேதி கல்லூரிகளின் வரிசையை மாற்றி அமைத்து, 21, 22-ந் தேதிகளில் ஒதுக்கீட்டை ஏற்க வேண்டும். இவர்களுக்கு 23-ந்தேதி இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும்.

* 114.75-77.5 கட்-ஆப் மதிப்பெண் வரை இருப்பவர்கள் (64 ஆயிரத்து 94 முதல் 1 லட்சத்து ஆயிரத்து 682 வரையிலான தரவரிசையில் உள்ளவர்கள்) 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை முன்வைப்பு தொகையையும், 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையில் விருப்பப்பாட பிரிவு, கல்லூரிகளையும் தேர்வு செய்ய வேண்டும். 26-ந்தேதி கல்லூரிகளின் வரிசையை மாற்றி அமைத்து உறுதி செய்ய வேண்டும். 26, 27-ந்தேதிகளில் ஒதுக்கீட்டை ஏற்க வேண்டும். 28-ந்தேதி இறுதி ஒதுக்கீடு அளிக்கப்படும்.

கலந்தாய்வில் கலந்து கொள்ளும் கல்லூரிகளின் கடந்த 3 ஆண்டுகள் கல்லூரிகள் பெற்ற தேர்ச்சி, நாக் அங்கீகாரம் உட்பட அனைத்து விவரங்களும் www.tndte.gov.in, www.tne-a-o-n-l-i-ne.in இணையதளங்களில் தரப்பட்டு இருக்கின்றன. இணையதள வசதி இல்லாத மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்ற உதவி சேவை மையங்களை அணுகி கலந்தாய்வில் பங்கு பெறலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.