
போரூர் அருகே, 'கொரோனா' வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதால், நீண்ட விடுப்பு அளிக்குமாறு, எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் எழுதிய கடிதம், வலை தளங்களில் வேகமாக பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே உலுக்கி கொண்டிருக்கும், கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவில், இதுவரை, கொரோனா வைரஸ் தொற்றால், 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மருத்துவமனைகளில், தனியாக சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில், கொ ரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அரசு சார்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அது குறித்த வதந்தியை பரப்பக்கூடாது என, அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், போரூ ரை அடுத்த முகலிவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தனக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக, ஒரு கடிதத்தை எழுதி, வலைதளத்தில் பரவவிட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:நான், தங்கள் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறேன். தற்போது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது, எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு, சளி, காய்ச்சல் அறிகுறி தெரிகிறது. சலி, காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள், பள்ளிக்கு வர வேண்டாம் என, அரசும் சுற்றறிக்கை செய்துள்ளது.எனவே, மற்ற மாணவர்களின் நலன் கருதி, நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாட்களை, வருகை நாட்களாக பதிவு செய்து கொள்ளுமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்த தகவல், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தெரியவந்தது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவரையும், அவரது பெற்றோரையும், நேற்று, பள்ளிக்கு அழைத்த தலைமை ஆசிரியர், அது குறித்து விசாரித்தார். அப்போது, விளையாட்டுத்தனமாக, அந்த கடிதத்தை எழுதியதாகவும், நண்பர்கள், அதை புகைப்படம் எடுத்து, வலைதளத்தில் பதிவிட்டதாகவும், மாணவர் தெரிவித்தார். 'இதுபோன்ற தவறுகள் இனி செய்யமாட்டான்; மகனை மன்னித்து, பள்ளியில் சேர்த்து கொள்ள வேண்டும்' என, மாணவனின் பெற்றோர், தலைமை ஆசிரியருக்கு, கடிதம் எழுதிக் கொடுத்தனர்.
அதேநேரத்தில், மாணவர் எழுதிய கடிதம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அதன் சான்றுகளை அளிக்குமாறு கூறிய தலைமை ஆசிரியர், அந்த மாணவரை, பெற்றோருடன் அனுப்பினார். கொரோனா கலக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை பயன்படுத்தி, விடுப்பு எடுக்க ஆசைப்பட்ட மாணவனின் கடிதம், நகைச்சுவைக்குரியதாக உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.