WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 16, 2021

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு: விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

 

கரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு பாடத்திட்டம் வெகுவாக குறைக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதளவழியில் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்குப்பின் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து இந்த வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே கல்வியாண்டு தாமதம் காரணமாக நிகழ் கல்வியாண்டில் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும், பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புக்கு 35 சதவீதம் வரையும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். இதற்கான பணிகளில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்சிஇஆா்டி) ஈடுபட்டது. தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கும் 50 சதவீதம்வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.



இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் நிகழ் கல்வியாண்டில் 70 சதவீத வேலைநாள்கள் முடிந்துவிட்டன. மீதமுள்ள நாள்களில் பாடங்களை நடத்த போதுமான அவகாசம் இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு பாடஅளவு குறைப்பு 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டக் குறைப்பு பாடங்கள் வாரியாக மாறுபடும். அதற்கான பணிகளும் முழுமையாக முடிந்துவிட்டன. இதுகுறித்த தொகுப்பறிக்கை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வா் ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியிடுவாா். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தோ்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.