WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 1, 2026

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்.

 



தமிழகம் முழு​வதும் அரசுப் பள்​ளி​களில் மாணவர் சேர்க்கை நாளை தொடங்​கு​கிறது.



தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை​யின்​கீழ் 37,554 அரசுப் பள்​ளி​கள் செயல்​படு​கின்​றன. இவற்​றில் 52 லட்​சம் மாணவ, மாணவி​கள் படிக்​கின்​றனர். அரசுப் பள்​ளிகளைப் பொருத்​தவரை, கோடை விடு​முறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி திறக்​கும் நாளில்​தான் மாணவர் சேர்க்கை தொடங்​கு​வது வழக்​க​மாக இருந்​தது.


இந்தச் சூழலில், மாணவர் சேர்க்​கையை அதி​கரிக்​கும் வித​மாக, கடந்த 2024-ம் ஆண்டு முதல், மார்ச் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்​கப்​படு​கிறது. இதற்கு பரவலாக பெற்​றோரிடம் நல்ல வரவேற்​பும் உள்​ளது.

இந்த நிலை​யில், அரசுப் பள்​ளி​களில் வரும் 2026-27 கல்வி ஆண்​டுக்​கான மாணவர் சேர்க்கை நாளை (மார்ச் 2) தொடங்க உள்​ளது. அதற்​கேற்பபள்​ளி​களில் உரிய முன்​னேற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. அங்​கன்​வாடி மையங்​களில் முன்​பரு​வக் கல்​வியை நிறைவு செய்​யும் 5 வயதுக்கு மேற்​பட்ட குழந்​தைகளை அருகே உள்ள அரசுப் பள்​ளி​களில் சேர்ப்​ப​தற்​கான நடவடிக்​கைகளும் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன.

‘அனைத்து அரசுப் பள்​ளி​களி​லும் மாணவர் சேர்க்கை விகிதம் கணிச​மான அளவில் அதி​கரிக்க வேண்​டும். அதற்​கேற்ப மாணவர் சேர்க்​கைக்​கான செயல்​பாடு​களை முன்​னெடுக்க வேண்​டும்.

அரசுப் பள்​ளி​களில் செயல்​படுத்​தப்​படும் எண்​ணும் எழுத்​தும், காலை உணவுத் திட்டம், ஸ்மார்ட் வகுப்​பறை​கள் உள்​ளிட்ட பல்​வேறு நலத் திட்​டங்​கள், உதவித் தொகைகள் குறித்து பெற்​றோரிடம் விழிப்புணர்வை ஏற்​படுத்​தி, மாணவர் சேர்க்கையை மேற்​கொள்ள வேண்டும்’ என்று அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித்​ துறை தரப்பில் உரிய அறி​வுறுத்​தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.