WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 1, 2026

8 லட்சம் பேர் எழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்.

 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்​தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்கி 26-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இத்​தேர்​வில் 8.27 லட்​சம் பேர் பங்​கேற்​கிறார்​கள்.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, பிளஸ் 2 வகுப்​பு​களுக்கு பொதுத்​தேர்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்பாண்​டுக்​கான பிளஸ் 2 பொதுத்​தேர்வு நாளை தொடங்கி 26-ம் தேதி நிறைவுபெறுகிறது. முதல்​நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்​களுக்​கான தேர்வு நடை​பெறும்.

இந்த தேர்வை மாநிலம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள 3,412 தேர்வு மையங்​களில் 8 லட்​சத்து 27,475 பேர் எழுதுகின்​றனர். இதில் 7,545 பள்ளி​களில் இருந்து 7 லட்​சத்து 99,692 மாணவர்​கள், 27,783 தனித்​தேர்​வர்​கள் மற்​றும் 281 கைதி​களும் அடங்​கு​வர். மேலும் 7,465 மாணவர்​கள் ஸ்கிரைப் உதவி​யுடன் தேர்​வெழுதவுள்​ளனர்.

பொதுத்​தேர்​வுக்​கான அறை கண்​காணிப்​பாளர் பணி​யில் 44,624 ஆசிரியர்​கள் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். முறை​கேடு​களைத் தடுக்க 4,540 நிலை​யான மற்​றும் பறக்​கும் படைகள் அமைக்​கப்பட்​டுள்​ளன. அதே​போல், மாவட்ட ஆட்​சி​யர், முதன்​மை, வட்​டாரக் கல்வி அலு​வலர் மற்​றும் வரு​வாய்த் துறை அதி​காரி​கள் தலை​மை​யிலும் சிறப்பு கண்​காணிப்​புக் குழுக்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. 154 வினாத்​தாள் கட்​டுக்​காப்பு மையங்​களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்​கிய காவல்​துறை அதி​காரி​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

ஏற்​பாடு​கள், கட்​டுப்​பாடு​கள் தேர்வு மையங்​களில் குடிநீர்,இருக்​கை, மின்​சா​ரம், காற்​றோட்​டம், வெளிச்​சம் மற்​றும் கழிப்​பறை வசதி​கள் செய்யப்​பட்​டுள்ளன. இதுத​விர மாணவர்​களுக்​கும், ஆசிரியர்​களுக்​கும் பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்ளன.

தேர்வறைக்குள் செல்போன் உள்​ளிட்ட மின்​சாதனப் பொருட்கள்கொண்​டுவரத்தடை விதிக்கப்பட்​டுள்​ளது. ஹால்​டிக்​கெட்​டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்​கள் நடக்க வேண்டும்.விடைத்​தாளில் நீலம் அல்​லது கருப்பு நிற பேனாவால் மட்​டுமே எழுத வேண்​டும்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.