WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 20, 2014

ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யதடை விதித்துள்ளது.


சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது; எழுத்து தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என, 7,500 காலி பணியிடங்கள் உள்ளன.பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பகம் மூலமும், நேரடியாக விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பணிகளில் சேர, போக்குவரத்து கழக அலுவலகங்களில், 2.31 லட்சம் பேர் விண்ணப்பம் பெற்றனர்.இதில், 1.50 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். கடந்த, 10ம் தேதி முதல், ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, நேரடியாக விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடந்து வருகிறது.

இளநிலை பொறியாளர்:இந்நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, முஜிபுர் ரகுமான் என்பவர், தாக்கல் செய்த மனு:நடத்துனர், ஓட்டுனர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு, கடந்த மாதம், 2ம் தேதி, கோவையில் உள்ள, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், விளம்பரம் வெளியிடப்பட்டது.அதன் அடிப்படையில், இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். வயது வரம்பை தளர்த்தி, இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு, வரும்,22ம் தேதி நடக்கும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள, என்னை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுஉள்ளது.

இம்மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:கடந்த, ஆகஸ்ட், 27ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 'போக்குவரத்து துறையில், தொழில்நுட்பம், போக்குவரத்து, நிர்வாகப் பிரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யக் கூடாது' எனக் கூறியிருந்தேன்.அந்த உத்தரவுக்குப் பின், கடந்த மாதம், 2ம் தேதி, கோவையில் உள்ள, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய தேர்வு, சட்டவிரோதமானது.'ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வுகளைத் தான், ரத்து செய்யமுடியாது' என, கூறியிருந்தேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்டில் நான் பிறப்பித்த உத்தரவுக்குப் பின், அதாவது, நவம்பர், 2ம் தேதி, பல்வேறு பணியிடங்களுக்காக, விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த விளம்பரத்தின் அடிப்படையில், நேர்முகத் தேர்வின் மூலம் மட்டுமே, தேர்வு செய்யக் கூடாது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை விரிவாக பரிசீலித்து தான், கடந்த ஆகஸ்டில் உத்தரவு பிறப்பித்தேன்.

தேர்வு நடத்தக்கூடாது:எனவே, கடந்த மாதம் வெளியிட்ட விளம்பரத்தின் அடிப்படையில், நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே, பணியிடங்களுக்கு தேர்வு நடத்தக் கூடாது. ஆகஸ்டில் பிறப்பித்த உத்தரவை, போக்குவரத்து 

கழகம் பின்பற்ற வேண்டும்.கடந்த ஆகஸ்டில் பிறப்பித்த உத்தரவின் நகலுடன், இந்த உத்தரவின் நகலையும் இணைத்து, போக்குவரத்து துறை செயலருக்கு, உயர் நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யாமல், கடந்த ஆகஸ்டில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தேர்வு செய்யும்படி, அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும், போக்குவரத்து துறை செயலர், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இந்த மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.உயர் நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதன் மூலம், தற்போது நடக்கும்நேர்முகத் தேர்வுக்கு தடை ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் தீர்ப்பு என்ன?*போக்குவரத்து துறையில், ஓட்டுனர், நடத்துனர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்வது, சட்டவிரோதமானது.
*வேலைவாய்ப்பகம் மூலம் மட்டும் அல்லாமல், வெளிச்சந்தையில் இருந்தும் (விளம்பரம் மூலம்), விண்ணப்பங்களை பெற வேண்டும்.
*பணி விதிகளின்படி, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 என, கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால், படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு, 'வெயிட்டேஜ்' அளிக்க வேண்டும் அல்லது கல்வித் தகுதிக்கு ஏற்ப, எழுத்து தேர்வு நடத்த வேண்டும்.
*கல்வித் தகுதி, 10ம் வகுப்புக்கு (எஸ்.எஸ்.எல்.சி.,) குறைவாக இருந்தாலோ, அல்லது பட்டப் படிப்பு என்றாலோ, எழுத்து தேர்வு அடிப்படையில் தான், தேர்வு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.