பொங்கல் விடுமுறைக்கு பின், பள்ளிகளை திறப்பது குறித்த கருத்து கேட்பு அறிக்கையை, பள்ளிக்கல்வி அதிகாரிகள், தமிழக அரசிடம் இன்று தாக்கல் செய்ய உள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, மார்ச் முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.கல்லுாரிகளை பொறுத்தவரை, டிச., 2ல் திறக்கப்பட்டு, இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து, 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு மாணவர்களுக்கு மட்டும், முதல் கட்டமாக பள்ளிகளை திறக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்த, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார்.இதன்படி, ஜன., 6 முதல் மாநிலம் முழுதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன.
பள்ளிகளில் இருந்து அறிக்கை பெற்று, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த அறிக்கை இன்று தொகுக்கப்பட்டு, தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.'இன்று நண்பகலுக்குள், மாவட்டங்களில் இருந்து, அறிக்கைகள் முழுமையாக வராவிட்டால், கருத்து கேட்பு அறிக்கை, 11ம் தேதி அரசிடம் தாக்கல் செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.