தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' என்ற, கணினி அறிவியல் பாடம் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.
இது தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு:ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும்.மேலும், 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 520.13 கோடி ரூபாய் செலவில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உயர்கல்வி உயர் கல்வி பயில, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி கட்டண சலுகை, ஒவ்வொரு ஆண்டும், இரண்டு லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக, 2020- - 21ம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில், 391.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.வரும், 2021- - 22ம் கல்வியாண்டு இடைக்கால பட்ஜெட்டில், உயர் கல்விக்காக, 5,478.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.