WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 15, 2025

CUET PG 2026 விண்ணப்பம் தொடக்கம்; மார்ச் மாதம் தேர்வு - நேரடியாக விண்ணப்பிக்க லிங்க் இதோ.

 

14.01.20262026-27 கல்வி ஆண்டில் மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு கல்லூரிகளில் வழங்கப்படும் முதுகலை பட்டப்படிப்பில் சேர்க்கைக்கான நடத்தப்படும் க்யூட் தேர்வு விண்ணப்பம் தொடங்கியுள்ளது. முதுகலை கியூட் 2026 (CUET PG 2026) தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் டிசம்பர் 14 முதல் தொடங்கி ஜனவரி 14 வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் https://exams.nta.nic.in/cuet-pg/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இதற்கான தேர்வு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

முதுகலை க்யூட் 2026 தேர்வு

இந்தியாவில் மத்திய பல்கலைக்கழகங்கள், சில குறிப்பிட்ட மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழங்களில் வழங்கப்படும் 157 முதுகலைப் பாடப்பிரிவிற்கு சேருவதற்கு மத்திய கல்வித்துறை மற்றும் யுஜிசி அங்கீகரித்து, தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் ஒவ்வொரு வருடமும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், 2026-27 கல்வி ஆண்டிற்கான தேர்விற்கு விண்ணப்பங்கள் டிசம்பர் 14 முதல் தொடங்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இத்தேர்வு தேசிய அளவில் கணினி வழியில் (CBT) 292 நகரங்களில் நடத்தப்படும்.

முதுகலை க்யூட் 2026 : விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் https://exams.nta.nic.in/cuet-pg/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்கலாம்.


படி 1 : https://exams.nta.nic.in/cuet-pg/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : அதில் முகப்புப் பக்கத்தில் "Registration for CUET(PG) 2026” என இடம்பெற்று இருக்கும்.
படி 3 : அதனை கிளிக் செய்யவும். தொடர்ந்து ஒரு பக்கம் திறக்கும். அதில் New Registration எனப்தை கிளிக் செய்யவும்.
படி 4 : அதில் தேர்வர்களின் விவரங்களை அளித்து, தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, தேர்விற்கான கட்டணத்தை செலுத்தி நிறைவு செய்ய வேண்டும்.
படி 5 : இறுதியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


தேர்வு கட்டணம்
முதுகலை க்யூட் 2026 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவர் 4 பாடங்கள் வரை தேர்வுச் செய்துகொள்ளலாம்.

2 தாள் வரை பொதுப்பிரிவினர் ரூ.1400 மற்றும் கூடுதல் தாளுக்கு ரூ.700 செலுத்த வேண்டும்.பொருளாதார பின்தங்கியவர்கள் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.1200 மற்றும் கூடுதல் தாளுக்கு ரூ.600 செலுத்த வேண்டும்.எஸ்சி, எஸ்டி மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் ரூ.1100 மற்றும் கூடுதல் தாளுக்கு 600 செலுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் ரூ.1000 மற்றும் கூடுதல் தாளுக்கு ரூ.600 செலுத்த வேண்டும்.வெளிநாடு மாணவர்கள் ரூ.7000 மற்றும் கூடுதல் தாளுக்கு ரூ.3500 செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள்
விவரம்தேதிகள்
விண்ணப்பம் தொடக்கம்14.12.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்14.01.2026
விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்14.01.2026
விண்ணப்பம் திருத்தம் செய்ய கால அவகாசம்18.01.2026 - 20.01.2026
தேர்வு நகரம் மற்றும் அட்மிட் கார்டுபின்னர் அறிவிக்கப்படும்
தேர்வு மாதம்மார்ச் 2026
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர பல்கலைக்கழகங்களின் விவரங்கள், அதில் வழங்கப்படும் பாடங்கள் மற்றும் அதற்கான தகுதிகள், முதுகலை க்யூட் தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களை தகவல் தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பத்தின்போது ஏதேனும் சிக்கல்களில் இருப்பின் 011-40759000/011 - 69227700 என்ற எண்ணிற்கு அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற இமெயில் ஐடியில் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.