WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 15, 2025

இனி UGC, AICTE, NCTE கிடையாதா? புதிய உயர்கல்வி ஆணையத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.

 



தேசிய கல்வி கொள்கை 2020 பரிந்துரைத்தப்படி, இந்தியாவின் உயர்கல்வியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய உயர்கல்வி ஆணையத்திற்கான மசோதாவிற்கு மத்திய அரசு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இதன் பெயர் விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதா மாற்றப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள

தேசிய கல்விக் கொள்கை 2020-யில் இந்தியாவின் உயர்கல்வியை நிர்வாகிக்க, ஒருகிணைந்த ஒரே ஆணையம் தேவை என்ற பரிந்துரை இடம்பெற்று இருந்தது. அதன் அடிப்படையில், கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, இந்தியாவின் உயர்கல்வியை நிர்வகித்து வரும் முக்கிய தூண்களான யுஜிசி (UGC), ஏஐசிடிஇ (AICTE), என்சிடிஇ (NCTE) ஆகியவற்றை இணைத்து, ஒரே ஆணையமாக உருவாக்க திட்டமிடப்பட்டது.


நவம்பர் மாதமே வெளியான தகவல்

நவம்பர் மாதமே வெளியான தகவல்

இதற்கான மசோதா மத்திய கல்வித்துறையின் மூலம் தயாரிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள தகவல் கடந்த மாதமே வெளியானது. இந்த ஆணையத்தின் முக்கிய பணிகளாக, ஒழுங்குபடுத்துதல், அங்கீகாரம் வழங்குதல் மற்றும் தரத்தை நிலைப்படுத்துதல் ஆகியவை ஆகும். இந்த ஆணையத்தின் கீழ் சட்டம் மற்றும் மருத்துவ உயர்கல்வி இடம்பெறாது.

UGC, AICTE, NCTE கலைக்க திட்டம்

UGC, AICTE, NCTE கலைக்க திட்டம்

தற்போது, இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதா 2025 (Viksit Bharat Shiksha Adhikshan Bill 2025) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் கீழ் கலை மற்றும் அறிவியல் உயர்கல்விக்கான அமைப்பாக உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC), தொழில்நுட்ப கல்விக்கு அமைப்பாக உள்ள இந்திய தொழில்நுப்ட கல்வி கவுன்சில் (AICTE) மற்றும் ஆசிரியர்கள் கல்விக்கான அமைப்பாக உள்ள தேசிய கல்வி கவுன்சில் (NCTE) ஆகியவை கலைக்கப்பட்டு, ஒங்கிணைந்து ஆணையத்திற்கு கீழ் செயல்படும்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயார்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயார்

மூன்று அமைப்புகளையும் ஒருங்கிணைந்து, அதனை ஒழுங்குபடுத்துதல், அங்கீகாரம் வழங்குதல் மற்றும் தரத்தை நிலைப்படுத்துதல் ஆகிய பணிகளை ஆணையம் மேற்கொள்ளும். இருப்பினும், நிதி வழங்குதல் என்பது மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் அடங்கும் என கூறப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டப்படி, உயர்கல்விக்கு நிதி வழங்குதலுக்கான தனி அமைப்பு உருவாக்கப்படலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது


தமிழ்நாடு அரசு Vs தேசிய கல்விக் கொள்கை

தமிழ்நாடு அரசு Vs தேசிய கல்விக் கொள்கை

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்விக்கான பிரத்யே மாநில கல்விக் கொள்கையை உருவாகி, இந்தாண்டு அமல்படுத்தியது. மேலும், அதன் அடிப்படையில் பாடத்திட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வியில் மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஏற்கெனவே, மாநில அரசிற்கும், ஆளுநருக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. மும்மொழி கொள்கையை ஏற்காத காரணத்தினால், கல்வி நிதியை மத்திய அரசு வழங்க மறுத்தது. தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை நிலை நிறுத்த, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வரும் நிலையில், உயர்கல்விக்கான புதிய ஆணையம் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.