WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 15, 2025

NMMS: மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

 



மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படுகிறது.



இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

நடப்பு (2025-26) கல்வி ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. விருப்பம் உள்ள 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதை பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து, தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் டிசம்பர் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.