'தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும், 27ம் தேதி முதல் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும்' என, தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு மற்றும் உள்ளாட்சி தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வரும், 27ம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.இடைநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, பட்ட தாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கவுன்சிலிங், 28ம் தேதி நடத்தப்படுகிறது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பிப்., 27 காலையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.அதேநாளில் பிற்பகலில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவிக்கு, பதவி உயர்வு வழியே இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வட்டார கல்வி அலுவலர் என்ற, பி.இ.ஓ., பதவி உயர்வு கவுன்சிலிங், 28ம் தேதி நடக்க உள்ளது.
கவுன்சிலிங் முடிந்த பின், தலைமை ஆசிரியர் காலியிடங்களை, அன்றே தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் சேர்க்க வேண்டும்.இந்த கவுன்சிலிங்குக்கு தகுதியானவர்கள் பட்டியல்,முன்கூட்டியே தயார் செய்யப்பட வேண்டும்.எந்த புகாரும் இல்லாமல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.