தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3ல் துவங்கி 21ல் நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கும். அந்த மாதத்தின் இறுதி வாரம் வரை நடத்தப்படும்.
இந்த முறை கொரோனா பிரச்னையால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பாடங்கள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதம் தாமதமாக பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.'ரிசல்ட்' எப்போதுசில ஆண்டுகளாக தேர்வு கால அட்டவணையுடன் தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை. சட்டசபை தேர்தல் காரணமாக 'ரிசல்ட்' தேதியை முன்கூட்டியே நிர்ணயிக்க முடியவில்லை என பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.