ஒன்பது, பிளஸ் 1 வகுப்புக்கு பள்ளியும், கல்லுாரிகளும் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவியர் உற்சாகம் அடைந்தனர். இதனால், அனைத்து கல்விக்கூடங்களும் இயல்பு நிலைக்கு திரும்பின.கொரோனா தொற்று, 2020 ஆண்டை, குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்களை முடக்கி விட்டது. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், வகுப்பறை சூழ்நிலையை அனைவருமே தவறவிட்டனர்.
பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பல்வேறு தடுப்பு நடவடிக்கையுடன் வகுப்பு நடக்கிறது.நேற்று ஒன்பது, பிளஸ் 1 மாணவர்களுக்கும் வகுப்பு துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில், 32 ஆயிரத்து, 73 மாணவர்களுக்கும், பிளஸ் 1 வகுப்பில், 28 ஆயிரத்து, 996 மாணவர்களுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், 62 சதவீத மாணவர்களே பள்ளிக்கு வருகை புரிந்தனர்.நிரம்பி வழிந்த கல்லுாரிகல்லுாரிகளை பொருத்தவரை, இளநிலை, முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள், ஆராய்ச்சித்துறை மாணவர்களுக்கு மட்டும் கடந்த, டிச., 7 முதல் கல்லுாரி திறக்கப்பட்டன. நேற்று அனைத்து கலை அறிவியல், இன்ஜி., டிப்ளமோ கல்லுாரி மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்கியது.பிளஸ் 2 முடித்து, ஆவலோடு எதிர்நோக்கி காத்திருந்த மாணவ, மாணவியர், 7 மாதங்களுக்கு பின் கல்லுாரிக்கு வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்ததில் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
வகுப்புக்கு, 25 பேர்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறியதாவது:திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில், 6 நாட்கள் வகுப்புகள் நடக்கும். தனிமனித இடைவெளி, முக கவசம் அணிதல், போன்றவற்றை மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை, மாலை, இரு வேளையிலும் கிருமிநாசினி தெளிக்கப்படும். அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்படுத்தப்படும்.
வகுப்புக்கு, 25 பேர் வீதம் கூடுதல் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டுள்ளனர். நுாலகம், ஆய்வகங்களையும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்படும் மாணவர்களுக்கு மட்டும், 14 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். மற்றபடி பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.