தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Post Graduate Assistants / Physical Education Directors Grade – I
காலியிடங்கள்: 2098
சம்பளம்: மாதம் ரூ.36,900 -1,16,600
தகுதி: உயிர்வேதியியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், ஆங்கிலம், நிலவியல், வரலாறு, இந்திய கலாச்சாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், தமிழ், விலங்கியல் போன்ற பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கிகளின் பற்று, வரவு அட்டைகள், ஆன்லைனில் செலுத்தலாம்
விண்ணப்பிக்கும் முறை: www.trb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2021 ஜூன் 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2021 முதல் 25.03.2021வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான மேலும் விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/pg2021/notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.