ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறையில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை முதன்மைச் செயலாளா் ஹா்சகாய் மீனா வெளியிட்டுள்ளாா்.
அதன் விவரம்:-
ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறும் நடவடிக்கை, கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டது. இதற்கான கேட்பு ரசீதுகள் எந்தத் தேதியில் எந்த நிலையில் இருந்தாலும், அதனை பரிசீலிக்க வேண்டாமென உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஈட்டிய சரண் விடுப்பு தொடா்பாக ஒப்புதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்து விட்டு, அந்த விடுப்புகளை அரசு ஊழியரின் விடுப்புக் கணக்கில் சோ்க்கலாம் என்று தனது உத்தரவில் ஹா்சகாய் மீனா தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.