தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அவற்றின் மீதான மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஜன.21ல் சில அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பங்கேற்ற பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவர்கள் மீது நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுவதாக பிப். 1ல் முதல்வர் அறிவித்தார்.அதை நிறைவேற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.