அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஏப்., 30க்குள் நடத்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கிடாதிருக்கை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப் தாக்கல் செய்த மனு:அரசு, கடந்த காலங்களில், தலைமை ஆசிரியர்களுக்கு முதலில் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தும். பின், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தும். 2020ல் கொரோனா ஊரடங்கால், இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை.நடப்பாண்டு, பொது இடமாறுதல் கலந்தாய்வு மூலம், சொந்த மாவட்டத்திற்கு செல்லும் எதிர்பார்ப்பில் இருந்தேன்.அதிர்ச்சியளிக்கும் விதமாக, பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பொது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டது.
பணியில் மூத்த தலைமை ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டில், பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அரசின் நடவடிக்கை உள்ளது. இது, சட்டவிரோதம். விதிமீறல் உள்ளது.உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, ஜேக்கப் குறிப்பிட்டார்.இதுபோல் பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை, ஏப்., 30க்குள் நடத்த அனுமதித்து, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.