WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 8, 2022

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு.. காலை சிற்றுண்டி! சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

தி.மு.க., அரசு பொறுப்பேற்று நேற்று ஓராண்டு முடிந்த நிலையில், 'அரசு துவக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.




இந்த திட்டம் முதலில் சில மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலை துார கிராமங்களில் துவக்கப்பட்டு, படிப்படியாக தமிழகம் முழுதும் விரிவுபடுத்தப்படும்' என்பது உட்பட, ஐந்து புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்தார்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு முடிந்து, நேற்று இரண்டாம் ஆண்டு துவங்கியது.
அதையொட்டி சட்டசபையில், 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு, இனிமேல் காலை நேர சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலை துார கிராமங்களில் இத்திட்டம் துவக்கப்படும்.


இதை உள்ளாட்சி அமைப்புகள் வழியாக வழங்குவோம். படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் தமிழகத்தில் உள்ள6 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்ததில், பெரும்பாலானோர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இருந்தனர்.எனவே, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், 'ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் திட்டம்' துவக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய உள்ளோம்.

மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி; ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு, சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஏற்படுத்த, அரசு முடிவெடுத்துள்ளதுதகைசால் பள்ளிகள் தமிழகத்தில் 'தகைசால் பள்ளிகள்' திட்டம் துவக்கப்படும். முதற்கட்டமாக, 150 கோடி ரூபாயில், 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

இப்பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சீரமைக்கப்படும். அனைத்து கட்டடங்களும் நவீனமயமாக்கப்படும். கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு, கைவினைச் செயல்பாடுகள் என, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு, அந்தப் பள்ளியில் உருவாக்கப்படும். படிப்புடன் சேர்ந்து மாணவர்களின் தனித்திறன்கள் அனைத்தும் வளர்த்தெடுக்கப்படும்.

இந்த வகைப் பள்ளிகளை, அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்நகர்ப்புற மருத்துவ நிலையம் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கும் திட்டத்தில், முதல்கட்டமாக, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட, 21 மாநகராட்சிகள்; 63 நகராட்சிகளில், 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.இந்த மருத்துவ நிலையங்களுக்கு, 108.45 கோடி ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.இவற்றில் காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, புறநோயாளிகள் சேவைகள் செயல்படுத்தப்படும்.









இந்த மையங்களில், ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர், ஒரு உதவியாளர் நியமிக்கப் படுவர்.வரும் 2030ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் நல்வாழ்வு என்ற இலக்கை தமிழகம் எட்டும் ஐந்தாவது, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டம். இந்த திட்டம், 234 சட்டசபை தொகுதிகளிலும் நடைமுறைக்கு வரும். ஒவ்வொரு தொகுதியிலும், நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகள் குறித்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து பரிசீலனை செய்வர்.

அடுத்து வரும் நிதி ஆண்டுகளில், அவற்றை நிறைவேற்ற முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு எம்.எல். ஏ.,வும் தங்கள் தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம், 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டும்.அந்தப் பட்டியலில் இருக்கக் கூடிய, மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை, முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற அரசு முடிவெடுத்துள்ளது. இந்தப் பணிகளுக்காக மட்டும், இந்த ஆண்டு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.இந்த திட்டம் நேரடியாக என் கண்காணிப்பில் நடக்கும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.