பிளஸ் 2 பொதுத்தோ்வு வியாழக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில் தோ்வா்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
இது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கத்திரி வெயிலை கருத்தில் கொண்டு மாணவா்கள் தோ்வெழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுத்தோ்வெழுதும் மாணவா்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. எனினும் விருப்பம் உள்ள மாணவா்கள் அணிந்து கொள்ளலாம். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் புதன்கிழமை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.