தமிழக தனியார் பள்ளிகளுக்கென்று அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டே இயங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் சில நிகழ்ச்சிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் தடை விதித்துள்ளது.
நிகழ்ச்சிகளுக்கு தடை:
பள்ளிகள் சாதி, மதங்களை கடந்து சக மனிதர்களுடனான ஒற்றுமையை வளர்க்கும் ஒரு இடமாக உள்ளது. ஒவ்வொரு மாணவரும் தேசப்பற்று, மனிதநேயம் உள்ளிட்ட விஷயங்களை பள்ளிகளில் தான் கற்கின்றனர். வெறும் பாலின அடிப்படையில் மட்டுமே மனிதர்களிடம் வேறுபாடு உள்ளது. மற்றபடி அனைவரும் ஒரே குலம், உலகில் ஆண், பெண் என இரண்டு சாதிகள் மட்டுமே உள்ளது என்ற அடிப்படை கருத்தை பள்ளிகள் தான் கற்று கொடுக்கிறது.
இந்த நிலையில் பள்ளிகளில் மதம், சாதி சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது எந்த வகையில் நியாயம். இது போன்ற நிகழ்வுகள் தனியார் பள்ளிகளில் நடந்து வருகிறது. தற்போது அண்ணா நகர் தனியார் பள்ளியில் நவம்பர் 26,27-ல் ஆர்.எஸ்.எஸ். முகாம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் தனியார் பள்ளிகளில் அரசியல், மதம், சாதி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற மத ரீதியான நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியிலும் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. பள்ளி என்கிற ஒரு பொதுவான இடத்தில் சாதி, மத, அரசியல் நிகழ்ச்சிகளை நடத்துவது முற்றிலும் தவறு என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.