WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, November 24, 2022

பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் – வாரந்தோறும் புதன் கிழமைகளில் செயல்படும்!!

 தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் புதிய திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.

மாநகராட்சி பள்ளிகள்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு வகையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. பொதுவாக பெற்றோர்களின் அதிகபட்ச ஆசையாக தங்களின் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது தனியார் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் கற்பிக்கப்படுவது போல அரசு பள்ளிகளிலும் ஆங்கில பயிற்சி வகுப்புகள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியிருப்பதாவது, சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ‘Spoken English’ வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசும் வகையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று காலை இறைவணக்கக் கூட்டத்தில் 2 நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேச மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதற்காக ஆசிரியர்கள் தமிழகத்தின் வரலாறு,கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய தலைப்புகளையும் மாணவர்களுக்கு வழங்குகின்றனர்.

அதன்படி மாணவர்கள் இந்த தலைப்புக்குரிய தகவல்களை அவர்களின் பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து தேடி எடுத்து கொண்டு தங்களை தயார்படுத்தி கொள்ளலாம். இதன் மூலமாக மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவது பற்றிய அச்சமும், மேடைகளில் பேசுவது குறித்த அச்சமும் நீங்கும் என்று கூறியுள்ளார். அத்துடன் தொடக்கப் பள்ளிகளில் இதுபோன்ற செயல்முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலமாக மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.