தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிய கூடிய பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கலந்தாய்வு:
நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் அதே போல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும் விகிதாசார அடிப்படையில் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் அவ்வப்போது ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான பணி நிரவல் கலந்தாய்வு வரும் 28, 29ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 2021 – 2022 ம் கல்வியாண்டில் 1.08.2022 தேதி நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் உபரி பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடுதல் தேவையுள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணி நிரவல் செய்யப்படவுள்ளனர். இதற்கான கலந்தாய்வு வரும் 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பட்டதாரிகளுக்கு 28ம் தேதியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 29ம் தேதி ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.