தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5303 கௌரவ விரிவுரையாளர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதச் சம்பளமாக 20000 வழங்கப்படுகிறது. ஒரு சில கௌரவ விரிவுரையாளர்கள் தொலைதூர பயணம் மேற்கொண்டு குடும்பத்தைப் பிரிந்து கல்லூரிகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில் உயர் கல்வித்துறை சார்பாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிரந்தர பேராசிரியர் கலந்தாய்வுக்கு பிறகு கௌரவ விரிவுரையாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு மூலம் தொலைதூரத்தில் பயணம் மேற்கொள்ளும் கௌரவ விரிவுரையாளர்கள் பணி மாறுதலுக்காக விண்ணப்பிக்கலாம் என எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதிலும் ஒரு சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இவ்வாறு பணி மாறுதலில் செல்லுகின்ற நபர்களின் சீனியாரிட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என குழப்பத்தில் இருந்து வருகின்றனர். ஏனெனில் தமிழக உயர்கல்வித் துறையை பொருத்தவரை கௌரவ விரிவுரையாளர்களின் சீனியாரிட்டி கணக்கிடுவதில் பலவிதமான குழப்பங்கள் நிலவுகிறது. ஒவ்வொரு கல்லூரியும் சீனியாரிட்டி கணக்கிடுவதில் வெவ்வேறு நடைமுறையை கடைப்பிடிக்கின்றன. இதை காரணம் காட்டி பல்வேறு முறைகேடுகளும் இதற்கு முன்பு நடந்துள்ளது. வழக்கமாக நிரந்தரப் பேராசிரியர்களுக்கு சீனியாரிட்டி என்பது அவர்கள் முதல் நிரந்தர அரசு கல்லூரி பணி அனுபவத்திலிருந்து எத்தனை கல்லூரிகள் மாறினாலும் மொத்த அரசு கல்லூரி பணி அனுபவத்தை பின்பற்றி தான் சீனியாரிட்டி கணக்கிடப்படுகிறது. அதை வைத்துத்தான் வருகை பதிவேட்டிலும் பெயர் எழுதுகிறார்கள். ஆனால் கௌரவ விரிவுரையாளர்கள் பணி மாறுதலில் சென்றாலோ அல்லது மகப்பேறு காலங்களில் பணியை இழந்து விட்டு மீண்டும் பணியில் சேர்தல், நிரந்தரப் பேராசிரியர்களின் பணி நிரவல் காரணமாக வேறு அரசு கல்லூரிக்கு பணிக்கு செல்லுகின்ற சூழல் ஏற்படும் பொழுது பெரும்பாலான அரசு கல்லூரி நிர்வாகங்கள் station seniority என்ற பெயரில் எத்தனை ஆண்டுகள் ஏற்கனவே அரசு கல்லூரியில் பணிபுரிந்தாலும் இந்த கல்லூரியைப் பொறுத்தவரை நீங்கள் ஜூனியர் என்று கூறி அவர்களின் பெயரினை வருகை பதிவேட்டில் எழுதுகிறார்கள். உதாரணத்திற்கு 10 வருடம் 15 வருடம் பணிபுரிந்து வந்தால் கூட புதிய கல்லூரிக்கு வரும்போது கௌரவ விரிவுரையாளர்களுக்கு பெரும்பாலான கல்லூரி நிர்வாகங்கள் பழைய கல்லூரி அரசு கல்லூரி பணி அனுபவத்தை எடுத்துக் கொள்வதில்லை. ஒரு சில கல்லூரிகளில் பணிபுரிந்து விட்டு மகப்பேறு பிரச்சனை காரணமாக வெளியே சென்று அதே கல்லூரிக்கு மீண்டும் பணிக்கு வரும்போது அவர்களின் பழைய பணி அனுபவத்தை கருத்தில் கொள்வது இல்லை. குறிப்பாக மீண்டும் கௌரவ விரிவுரையாளர் வெளியேற்றும் சூழல் ஏற்படும் சமயத்தில் பெரும்பாலும் புதிதாக கல்லூரிக்கு வந்தவர் ஜூனியர் என்று கூறி ஒரு சில கல்லூரிகளில் வெளியேற்றப் பட்டுள்ளனர். ஆனால் இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர்கள் மூலமாகவும் கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் சார்பாகவும் புகார் கொடுத்தும் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகமும் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது . எனவே தமிழக உயர்கல்வித்துறை அதிகாரிகள் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடமாறுதலில் செல்லும் சூழ்நிலை ஏற்படும் போது அவர்களின்
*மொத்த அரசு கல்லூரி பணி அனுபவத்தை வைத்து மட்டுமே சீனியாரிட்டி
* கணக்கிடப்பட வேண்டும். மாறாக
*station seniority* என்று கூறி ஒரு சில கல்லூரிகளில்
*குறைந்த அரசு கல்லூரி பணி அனுபவம் உள்ள நபர்களை வைத்துக் கொண்டு புதிதாக பணி மாறுதலில் வந்த அதிக அரசு கல்லூரி பணி அனுபவம் வாய்ந்த கௌரவ விரிவுரையாளர்களை வெளியேற்றுவது
* தவறான நடைமுறையாகும். இது இது சமூக நீதிக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது. இது போன்ற
*நடைமுறை தற்போது நடக்க உள்ள அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர் பணி மாறுதல் கலந்தாய்விலும்
* தொடர்ந்தாலோ, அல்லது கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் மூலமாக அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் சீனியாரிட்டி கணக்கிடுவதில் தெளிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படாமல் தொடரும் பட்சத்திலோ
*நல் எண்ணத்துடன் கௌரவ விரிவுரையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு தனியாக வைக்கப்படுகின்ற இடம் மாறுதல் கலந்தாய்வு பலன் அளிக்காது
* எனவே கடந்த காலங்களில் நடந்த குழப்பங்களுக்கும் முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசின் உயர்கல்வித் துறை அதிகாரிகளும் மாண்புமிகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஐயா அவர்களும் மாண்புமிகு உயர்கல்வித்துறை செயலாளர் அவர்களும் மாண்பு கல்லூரி கல்வி இயக்குனர் அவர்களும் புதிய தெளிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர் கல்வித் துறையின் சார்பாக வெளியிடுமாறு தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.