WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 19, 2022

தமிழகத்தில் ஜன.2 அன்றும் விடுமுறை.. பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து திறப்பதில் குழப்பம்!!

 தமிழக அரசு நேற்று டிச.24ம் தேதி முதல் 2023 ஜன. 01ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் இந்த மாவட்டத்தில் ஜன.2 விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த 15 ஆம் தேதியில் இருந்து அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் 23 ஆம் தேதி வரை நடத்தப்படும். மேலும் அரசு டிசம்பர் 24ம் தேதி முதல் 2023 ஜனவரி 01ம் தேதி வரை 9 நாட்களுக்கு அரையாண்டுத்தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வரும் ஜனவரி 2 ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று ஓய்ந்த பிறகு இந்த வருடம் மிக பிரமாண்டமாக இந்த விழா கொண்டாடப்பட இருக்கிறது .இதனால் அம்மாவட்ட ஆட்சியர் முக்கிய ஜனவரி 2ம் தேதி உள்ளுர் விடுமுறையை அறிவித்துள்ளார்.

இதனால் அங்கு கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்கள் அனைத்திற்கும் ஜனவரி 2 அன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் அரசு ஜனவரி 2ம் தேதி அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் திருச்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.