WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 8, 2022

தமிழகத்தில் பள்ளி & கல்லூரிகளுக்கு டிச.8, 9 விடுமுறை? மாண்டஸ் புயல் எதிரொலி!!

இன்று வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருகிற 8,9ம் தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து கடந்த 5ம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. அத்துடன் நேற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதையடுத்து இன்று மாலை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக நாளை முதல் 10 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அத்துடன் அதீத கனமழை காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயலால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு, வருகிற 8, 9ம் தேதி ஆகிய 2 நாட்கள் விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.