தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து பாரத பிரதமருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கல்வி உதவித்தொகை:
பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும், குறிப்பிட்ட பிரிவு மற்றும் வகுப்பு வாரியான சலுகைகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இவை அனைத்தும் மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து ஊக்கத்துடன் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்படுகிறது.
இதனை மூலம் மாணவர்களின் கல்வி இடைநிற்றல் விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான சிறுபான்மையின மாணவர்களுக்கு முன்னர் வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை மீண்டும் அளிக்க வேண்டும் என்றும், 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை அளிக்காமல் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் அளிப்பது தான் சிறந்தது என்று கடிதம் அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.