தமிழக பள்ளி கல்வித்துறை, அரசு பள்ளிகளுக்கான புதிய இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்த விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இணையதளம்:
தமிழகத்தில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறையில் ஏராளமான மாற்றங்கள் வந்துள்ளது. முதல் கட்டமாக மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கும் நோக்கில் எண்ணும் எழுத்தும், ரீடிங் மாரத்தான், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்திஅதனை தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த வரிசையில் தற்போது ‘நம்ம ஸ்கூல்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இத்திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வின் போது பேசிய அவர், இந்தியாவில் தற்போது தரமான கல்வி வழங்குவதில் தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாக உள்ளது என்று கூறினார்.னார்.
இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு உதவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது nammaschool.tnschool.gov.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 37,000 அரசு பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கும் தேவையான நிதி, மேசை, இருக்கை உள்ளிட்ட விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.