WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, December 25, 2022

புதிய 1895 கௌரவ விரிவுரையாளர் நியமனத்திற்கு முன்பாக பணி மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்த கோரிக்கை.

தமிழகம்  முழுவதும் உள்ள   163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  5303 கௌரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.  கடந்த மூன்று ஆண்டுகளாக நிரந்தர பேராசிரியர் பணியிடமாறுதல் கொரோனா காலகட்டத்தால் நடைபெறாமல் இருந்தது. இதுவரை கௌரவ விரிவுரையாளர்களுக்கு கலந்தாய்வு ஒரு முறை கூட நடத்தப்பட்டது இல்லை. கொரோனா காலம் முடிந்த பிறகு அதேசமயம் புதிய ஆட்சி அமைந்த பிறகு தற்போது நிரந்தரப் பேராசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வு முடிந்த பிறகு கௌரவ விரிவுரையாளர்களுக்கும் ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தப்படும் என மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளதை தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி  கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் மனமார வரவேற்கின்றது. இந்த தருணத்தில்  தற்போது நிரந்தரப் பேராசிரியர்கள் பணி மாறுதல் காரணத்தை முன்னிட்டு கல்லூரிக்கு வரும்பொழுது ஒரு சில கல்லூரிகளில் அங்கு நீண்ட காலமாக பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர்கள்  வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். எனவே நிரந்தரப் பேராசிரியர்கள் பணி மாறுதலைத் தொடர்ந்து கௌரவ விரிவுரையாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வினை நடத்த வேண்டும் எனவும் அதன் பிறகு  நிரந்தர பேராசிரியர் பணி நிரவல் மற்றும் அண்ணாமலை பேராசிரியர் பணி நிரவல் காரணமாக பணி வாய்ப்பினை இழந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளித்தது போக மீதமுள்ள பணியிடங்களில் புதிய கௌரவ விரிவுரையாளர்களை பணி நியமனம் செய்யுமாறு தமிழக முதல்வர் அவர்கள் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட தமிழக உயர் கல்வித்துறை அதிகாரிகளை தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர் சங்கம் வலியுறுத்துகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.  எனவே புதிய 1895 கௌரவ விரிவுரையாளர் பணியிட நியமனத்திற்கு முன்பாகவே கவுரவ விரிவுரையாளர்கள் கலந்தாய்வு நடத்தப்பட்டால்  தொலைதூரத்தில் பயணம் செய்து கற்பித்தல் பணியை செய்து வரும் விரிவுரையாளர்கள் தமது கிராமத்திற்கு அருகில் உள்ள காலியாக உள்ள கல்லூரிகளில் பணி மாறுதலில் செல்ல காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மாவட்டத்துக்கு மாவட்டம் காலி பணியிடங்களில் மட்டுமே மாற்றம் ஏற்படும். ஒட்டு மொத்தமாக 1895 கௌரவ விரிவுரையாளர் காலி பணியிடங்களில் எந்தவித மாற்றமும் இருக்காது. அதன் பிறகு பணியமர்த்தப்படும் கௌரவ விரிவுரையாளர்களும் நீண்ட நாட்களுக்கு இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள கல்லூரியில் பணியாற்ற வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் தற்போது 1895 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகு தான் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் செயல்பட்டு help center அதிகாரி மூலமாக தகவல் கிடைக்கப் பட்டுள்ளது. புதிதாக கௌரவ விரிவுரையாளர்கள் பணியமத்தப்பட்ட பிறகு கௌரவ விரிவுரையாளர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுவதாக செய்திகள் வெளியே வருகின்றது. இதன் உண்மையைத் தன்மையைப் பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தற்போது காலியாக இருக்கின்ற பணியிடங்களில் எல்லாம் புதிதாக நியமனம் செய்யப்படுகின்ற கௌரவ விரிவுரையாளர்கள்  கொண்டு நிரப்பப்பட்ட பிறகு  கௌரவ விரிவுரையாளர் பணி மாறுதல்  நடத்தப்படுவதால் ஏற்கனவே பணி மாறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுபவர்களுக்கு ஏமாற்றம் அளிக்க வாய்ப்பு உள்ளது. அத்தகைய நிலையில் நடத்தப்படுகின்ற கௌரவ விரிவுரையாளருக்கான இடம் மாறுதல் கலந்தாய்வு பயனற்றதாகிவிடும். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கல்லூரி கல்வி இயக்குனரகம் பின்பற்றப்படுகின்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கௌரவ விரிவுரையாளர்களின் சீனியாரிட்டி கணக்கிடுவதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. இதனை காரணமாக கொண்டு  பல்வேறு உயர்கல்வி துறை சம்பந்தமான முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நிரந்தரப் பேராசிரியர்களுக்கு அரசு கல்லூரி பணி அனுபவத்தை வைத்து சீனியாரிட்டி கணக்கிடப்படுகிறது. அதைக் கொண்டு வருகை பதிவேட்டிலும்  அதன் அடிப்படையில் பெயர் இடம் பெறுகிறது. ஆனால் தற்போது கல்லூரி கல்வி உயர் அதிகாரிகளின் வாய்வழியாக கூறப்படும் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கௌரவ விரிவுரையாளர்களுக்கான   சீனியாரிட்டி என்ற பணி மூப்பு கணக்கிடும் பொழுது ஒட்டுமொத்த அரசு கல்லூரி பணி அனுபவத்தை கணக்கிடாமல் station seniority யை அடிப்படையாகக் கொண்டு கௌரவ விரிவுரையாளர்களின் சீனியாரிட்டி கணக்கிடப்படுவதாக அரசு கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர் சங்கம் குற்றம் சாட்டுகிறது. இதன் காரணமாக யுஜிசி தகுதி உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் யுஜிசி தகுதி இல்லாத கௌரவ விரிவுரையாளர்கள் அதே கல்லூரியில் பணியாற்றி வருகிறார்கள்.  இது போன்ற தவறான சட்டத்துக்கு புறம்பான  வழிகாட்டுதல் நெறிமுறைகளாலும் யுஜிசி தகுதியுடன் பணியாற்றி வருகின்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படுகின்ற குறைந்த ஊதியத்தாலும் தமிழகத்தின் கல்வித் தரமானது மிக மிக கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அதாவது தமிழகம் தரமான கல்வியை வழங்குவதில் மிக மிகப் பின்தங்கி இந்தியாவிலேயே 27 வது இடத்தைப் பிடித்துள்ளது.   ஆனால் இந்தியாவிலேயே உயர் கல்வி பெறும் மாணக்கர்  விகிதங்களில் மத்திய அரசின் இலக்கான 25 சதவீதத்தை தாண்டி 52 சதவீதத்தில் தமிழகம் முதல் இடத்தில் வகிக்கின்றது.      இந்தியாவிலேயே உயர்கல்வி அதிகம் விரும்பி படிக்கும் மாணவர்களுக்கு கல்வியை கற்றுத் தருகின்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது கவலை கொள்ள செய்கிறது. இந்தியாவிலேயே அதிக வருவாய் ஈட்டக்கூடிய மாநிலங்களில்   தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கின்ற பட்சத்தில் கல்வியினை போதிக்கின்ற அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்க முன் வருவதில்லை. ஆனால் மாணவர்களின் அடிப்படை வசதிகளை கவனத்தில் கொள்ளாமல் புதிய கல்லூரிகளை தொடங்குவதில் மட்டுமே ஆட்சியாளர்கள் கவனத்தை செலுத்துகின்றனர். புதிய கல்லூரிகளை துவக்குவதில் கவனம் செலுத்தும் அரசும் அரசுத் துறை அதிகாரிகளும் நல்ல பாடப்பிரிவுகளை கொண்டு வருவதில் அக்கறை காட்டுவதில்லை. குறிப்பாக  ஏற்கனவே பல அறிவியல் பாடப் பிரிவுகளை கொண்டுள்ள கல்லூரிகளில் பிகாம் தமிழ் வழிப்படிப்புகள் உயிர் வேதியியல் படிப்புகள் போன்ற படிப்புகளை கொண்டு வர அரசு முயற்சி செய்கிறது. ஆனால் அதே வேளையில் Defence , Geology, political science, BCA  போன்ற படிப்புகளை புதியதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளில் கொண்டு வர அரசு முன் வர வேண்டும். அது மட்டும் அல்லாது இயற்பியல் வேதியியல் தாவரவியல் விலங்கியல் போன்ற M.sc  பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் நடத்த வேண்டும். தமிழகத்தில் அறிவியல் சார்ந்த முதுநிலை தமிழ் வழி படிப்புகள் கணிதத்தை தவிர வேறு பாடப் பிரிவுகள் தமிழ் மொழியில் இல்லை.  மேலும் தமிழகத்தில் பணியாற்றக்கூடிய தற்காலிக பணியாளர்களுக்கு நியாயமாக தரவேண்டிய பண பலன்கள் விடுமுறை போன்ற சலுகைகளை அரசு தருவதில்லை. கடந்த காலங்களில் இது போன்ற குற்றச்சாட்டுகளும் முறைகேடுகளும் உயர் கல்வித் துறையில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த குறைகளை அப்போதைய  உயர் அதிகாரிகள் செவி கொடுத்து கேட்கவில்லை.   தற்போது புதிய அரசு அமைந்திருக்கிறது. கௌரவ விரிவுரையாளர்களின்  நெடிய கோரிக்கைகளில் குறிப்பிட்ட தேதிகளில் ஊதியம் வழங்குவது தொடர்பான ஒரு சில கோரிக்கைகள் நேர்பட தன்மையுடன் நிறைவேற்றி தந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே   மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள்   கௌரவ விரிவுரையாளர்களின் இடமாறுதல் கலந்தாய்வு கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். இந்த  கலந்தாய்வு மூலம் சுமார் 200 கவுரவ விரிவுரையாளர்கள் தமது சொந்த கிராமத்திற்கு அருகில் உள்ள கல்லூரிகளில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. இதனால் எந்தவித மன அழுத்தம் இல்லாமல் கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்ற இயலும். எனவே இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.