சந்தையில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதில் தாமதம் நிலவுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அதற்குரிய விவரங்களை நிதித்துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் ஆசிரியர்கள் தகவல்களை பதிவேற்றுவதில் சிரமம் இருந்தது. இந்த விவரத்தை நிதித்துறைக்கு தெரிவித்து சிக்கல் சரிசெய்யப்பட்டது. தற்போது வலைதளம் வழக்கம்போல் இயங்குகிறது. எனவே, ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.
விரைவில் விநியோகம்:
இலவச மடிக்கணினி திட்டத்தில் மொத்தம் 11 லட்சம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க வேண்டியுள்ளது. தற்போது சந்தையில் கணினி தயாரிப்புக்கான சிப் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, மாணவர்களுக்கு தேவையான மடிக்கணினிகள் விரைவில் கொள்முதல்செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.