தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக சென்னையில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை என மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையடுத்து, தற்போது ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதே போன்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது, தமிழகத்தில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும் என கூறியுள்ளது.
ஆனால், தற்போது நிதிச்சுமையை காரணமாக காட்டி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பதாக அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதனால், பழைய பென்சன் திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாநில அளவிலான மாநாடு வருகிற பிப்ரவரி 11ம் தேதி அன்று சென்னையில் நடைபெற உள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.