WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 30, 2023

பழைய ஓய்வூதிய திட்டத்தை விடவே மாட்டோம்.. அரசியல் தலைவர்களை கூட்டி மாநில அளவில் மாநாடு!

தற்போது அரசு ஊழியர்களுக்கு அமலில் உள்ள சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடைபெற இருப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம்
2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு 2004ஆம் ஆண்டு முதல் தேசிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு சிபிஎஸ் (CPS) எனப்படும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது.

அரசு ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கை

அரசு ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்த நிலையான ஓய்வூதியமும், பலன்களும் பங்களிப்பு பென்சன் திட்டத்தில் கிடைப்பதில்லை எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மாநாடு

இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து மாநில அளவிலான கோரிக்கை மாநாட்டை பிப்ரவரி 2ஆம் தேதி நடத்தப்போவதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கோரிக்கைகள்

கோரிக்கைகள்
வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களிலும், தேர்தல் வாக்குறுதிப்படி வெற்றிபெற்ற பஞ்சாப், இமாசல பிரதேச மாநிலங்களிலும் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக தேர்தல் கால வாக்குறுதிப்படி சிபிஎஸ் ரத்து செய்ய கோரியும், பணிக்கொடை வழங்க கோரியும் இந்த கோரிக்கை மாநாடு நடைபெறவுள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.